Posts

Showing posts from May, 2025

1) ஜோதிராவ் ஃபுலே

Image
மகாத்மா என்ற பட்டத்தை அடைந்த முதல் மனிதர் இவர் தான். இவருக்கு பின்னர் தான் காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டமே கிடைத்தது. காந்தியடிகளால் எனது வழிகாட்டி/மானசீக குரு என்று புகழப்பட்டவர். தனது சேவையினாலும் தன்னமற்ற தொண்டுகளாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்விலும் கல்வியிலும் தடைக்கற்களை எல்லாம் சுக்குநூறாக்கி ஒளியேற்றிட வைத்தவர் தான் இந்த மகாராஷ்டிர மாநிலத்து மைந்தன் ஜோதிமா புலே என்றும் அழைக்கப்பட்ட ஜோதிராவ் ஃபுலே. தீண்டாமை ஒழிப்பு, சாதி அமைப்பை ஒழித்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்வி கற்பித்தல் என இவரின் பணி அளப்பரியது.  கிபி 1827ல் ஏப்ரல் 11ல் பூனே அருகிலுள்ள கிராமத்தில் மாலி சாதியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் பழம் மற்றும் காய்கறி விவசாயிகளாக இருந்தனர். இந்து தெய்வமான ஜோதிபாவின் பெயரால் ஜோதிபா புலே என்று பெயரிடப்பட்டார். பூலேவின் கொள்ளுதாத்தா கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த காரணத்தால் சதாரா மாவட்டத்தில் உள்ள பூர்வீக கட்குன் கிராமத்தில் இருந்து குடும்பம் புனே மாவட்டத்தில் உள்ள கான்வாடிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவரது தாத்தா பூ வேலைகள் செய்ய கற்றுக் கொண்டார...